நாமக்கல்

மக்களவைத் தேர்தல் பணிக்கு வாடகை விடியோ கேமரா: விலைப்புள்ளி அளிக்க வேண்டுகோள்

DIN

மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விடியோ கேமராவுக்கான வாடகை தொடர்பான விலைப்புள்ளி விவரங்களை அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் விடியோகிராபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே விடியோகிராபர்கள் விடியோ கேமராவுடனான வாடகை விவரங்களை இறுதி செய்யும் பொருட்டு விலைப்புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளது. இதற்கான படிவங்களை ‌w‌w‌w.‌t‌e‌n‌d‌e‌r‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n மற்றும் w‌w‌w.‌n​a‌m​a‌k‌k​a‌l.‌t‌n.‌n‌i​c.‌i‌n ஆகிய இணையதளங்களில் வரும் 12 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி மாலை 3  மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் படிவங்களை வரும் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் உள்ள மூடி முத்திரையிடப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும்.  அன்று மாலை 3.30 மணிக்கு பெட்டி திறக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019 தொடர்பான விடியோகிராபர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT