நாமக்கல்

சென்னை - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க நாமக்கல் எம்.பி. வலியுறுத்தல்

DIN

சென்னை எழும்பூர்  - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க வேண்டும் என நாமக்கல் எம்பி.  பி.ஆர்.சுந்தரம் மத்திய ரயில்வே  அமைச்சர் பியூஸ் கோயலிடம் நேரில் வலியுறுத்தினார்.
புது தில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை அண்மையில் நேரில் சந்தித்த அவர்,  நாமக்கல்,  ராசிபுரம், மோகனூர் பகுதி மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து,  சேலம் வரை இயக்கப்பட்டு வரும் ரயிலை கரூர் வரை நீட்டிக்க வேண்டும்.  மேலும் சேலம் - கரூர் பயணிகள் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் பகுதியைச் சேர்ந்த பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து சேலம் - கரூர் பயணிகள் ரயில் மீண்டும் பிப்.15 முதல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT