நாமக்கல்

மகளிருக்கான சட்ட ரீதியான உரிமைகள் குறித்து தேர்வுதேர்வில் பங்கேற்ற மாணவிகள்.

DIN


மகளிருக்கான சட்ட ரீதியான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவிகளுக்கான சட்ட உரிமைகள் குறித்த தேர்வு நடைபெற்றது. 
தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் இந்தத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. 
மகளிருக்கு அரசியல் சாசனம் வழங்கும் உரிமைகள், சட்ட ரீதியான உரிமைகள் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டன. சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் மூலம் தேர்வு 2 மணி நேரம் நடத்தப்பட்டது. கல்லூரி அளவில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 303 மாணவிகள் பங்கேற்றனர். 
முதல் இடம் பெறும் மாணவிக்கு ரூ.2,000, இரண்டாம் இடம் மாணவிக்கு ரூ.1,500, மூன்றாம் இடம் பெறும் 5 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசுகள் வழங்கபடவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT