நாமக்கல்

இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம்

DIN

இந்து முன்னணி சார்பில் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்செங்கோட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ராமசாமி அம்மணியம்மாள் மண்டப உரிமையாளர் ராஜசேகர், எஸ்.ஆர்.கே. பேருந்து உரிமையாளர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ரா. அய்யாவு ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், பரமேஸ்வரன், மாநில துணைத் தலைவர் பூசப்பன், ஜெயக்குமார், அரசு ராஜா, மாநிலச் செயலாளர்கள் அண்ணாதுரை, கிஷோர்குமார் மற்றும் மாநில, கோட்ட, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சபரிமலையின் சட்டம் ஒழுங்கை கேரள அரசு காக்க தவறியதாக கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் இராம. கோபாலன் கலந்து கொண்டு  இந்து முன்னணி அமைப்பின் வேலையை அதிகப்படியான கிராமங்களுக்கு விரிவுபடுத்துவதின் அவசியம் குறித்துப் பேசினார். தொடர்ந்து பெரிய தேர் அருகில் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. இதில், திருச்செங்கோடு நகர பொதுச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT