நாமக்கல்

பரமத்திவேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 2,200-க்கு ஏலம்

DIN

பரமத்திவேலூர் தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ  ரூ. 2,200-க்கு ஏலம்போனது.
பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500-க்கும், முல்லை பூ ரூ. 1,500-க்கும் பெங்களூரு மல்லிகை ரூ. 600-க்கும் சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், அரளி கிலோ ரூ. 200-க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ. 110-க்கும், ரோஜாப்பூ கிலோ ரூ. 150-க்கும் ஏலம் போனது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 2,200-க்கும், முல்லை பூ ரூ. 2 ஆயிரத்துக்கும் பெங்களூரு மல்லிகை ரூ. 900-க்கும் சம்பங்கி கிலோ ரூ. 200-க்கும், அரளி கிலோ ரூ. 250-க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 150-க்கும்,ரோஜா கிலோ ரூ. 200-க்கும் ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக  பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT