நாமக்கல்

"கொடநாடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்'

DIN

கொடநாடு காவலாளி  கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக விவசாயப் பிரிவு செயலரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் கே.பி.ராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.
ராசிபுரம் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவர் பங்கேற்று பேசியது: கொடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் முதல்வர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு உண்டு. எனவே, இதில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் சரியாக இருக்கும்.
இந்த குற்றச்சாட்டு தவறாக இருந்தால், குற்றச்சாட்டை கூறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யக்கூட அரசு முன்வராததால், விவசாயிகள் நெல்களை சாலையோரமும், வீதிகளிலும் கொட்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு, உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார். முன்னதாக, திமுக கட்சிக் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். 
இதேபோல், கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அவர் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கட்சிக் கொடியேற்றினார். இதில் திமுக கிளை நிர்வாகிகள் யுவராஜ், சதீஷ்குமார், மணி, சண்முகம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT