நாமக்கல்

மணல் திருட்டு:3 வாகனங்கள் பறிமுதல்

DIN


பரமத்தி வேலூர் வட்டம்,கொந்தளம் காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருடப் பயன்படுத்திய 3 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.
 கொந்தளம் காவிரி ஆற்றுப் பகுதியில் முறைகேடாக மணல் திருட்டு நடைபெறுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிச்சாமி மேற்பார்வையில் பரமத்தி வேலூர் போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் கொந்தளம் காவிரி ஆற்றுக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கொந்தளம் காவிரி ஆற்றில் இருந்து முறைகேடாக மணல் எடுப்பது தெரியவந்தது. போலீஸார் வருவதைப் பார்த்ததும் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 3 பேர் இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT