நாமக்கல்

கொப்பரை தேங்காய் விலை உயர்வு

DIN


பரமத்திவேலூர், ஜூன்13:   பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்வடைந்துள்ளது.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து,  அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக்கிழமை தோறும்  வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தாற் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 3,805 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.80.39-க்கும்,  சராசரியாக ரூ.82.69 - க்கும் ஏலம் போனது.  மொத்தம் ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 812 - க்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,265 கிலோ கொப்பரை தேங்காய்கள்  கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.88.65-க்கும், குறைந்த பட்சமாக ரூ.81.99 -க்கும்,  சராசரியாக ரூ.86.99 -க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 191 - க்கு வர்த்தகம் நடைபெற்றது. கொப்பரை தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT