நாமக்கல்

முட்டை விலை மேலும்  15 காசுகள் உயர்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை  ஒன்றின் விலை மேலும் 15 காசுகள் உயர்வடைந்து,  ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த  ஒரு வாரமாக முட்டை விலை,  அனைத்து மண்டலங்களிலும் ஏறுமுகமாக உள்ளது.  அதன்படி, நாமக்கல் மண்டலத்திலும் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 காசுகள் உயர்ந்திருந்தது.  
இந்த நிலையில், பிற மண்டலங்களின் விலையேற்றம், பருவமழையின் தாக்கம்,  சத்துணவு மையங்களில் முட்டை விநியோகம், மக்களிடையே வாங்கும் நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை கூடிய தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்,  ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல்  விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு  ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 
சென்னை மண்டலத்தில் 10 காசுகள் உயர்த்ப்பட்டு ரூ.4.40-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பிற மண்டலங்களின் முட்டை விலை விவரம் (காசுகளில்): 
ஹைதராபாத் -375,  விஜயவாடா - 372,  பார்வலா - 340,  மைசூரு - 405, ஹோஸ்பெட்- 370,  மும்பை  - 425,  பெங்களூரு - 405, கொல்கத்தா - 427, தில்லி -353.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ.84,  கறிக்கோழி விலை ரூ.103-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT