நாமக்கல்

பொருள்கள் வாங்கி பாதிப்படையும் நுகர்வோர் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்: நீதிபதி எஸ்.செங்கோட்டையன்

DIN


பணம் செலுத்தி பொருள்களை வாங்கிப் பாதிப்படையும் நுகர்வோர்,  குறை தீர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் ரூ.20 லட்சம் வரையில் இழப்பீடு பெறலாம் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி எஸ்.செங்கோட்டையன் பேசினார்.
தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியின் நாமக்கல் மாவட்ட கிளை, நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், அண்மையில்  உலக நுகர்வோர் தின விழா மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இதில், நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் எஸ்.செல்வம் தலைமை வகித்தார். செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் கே.சசிகுமார் வரவேற்றார். கமிட்டியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் டால்பின் கே.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.இக்பால் அறிமுக உரையாற்றினார். நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி எஸ்.செங்கோட்டையன் கருத்தரங்கை தொடக்கி வைத்த, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, அவர் பேசியது:  1986 -ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. மேலும், 90 நாள்களில் பாதிக்கப்பட்டோருக்கு, குறைந்த செலவில் நிவாரணம், இழப்பீடு பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டது. பணம் செலுத்தி பொருள் மற்றும் சேவைகளைப் பெறுவோர் பாதிக்கப்பட்டால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.20 லட்சம் வரையில் இழப்பீடு பெற முடியும். அதற்கு நீதிமன்ற கட்டணமாக ரூ.500 செலுத்தினால் போதும். ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு பெற ரூ.4 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.1 கோடிக்கு மேல் ரூ.5 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். 90 நாள்களுக்குள் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார். 
விழாவில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் பி.எஸ்.செல்வநாதன், நுகர்வோர் கமிட்டியின் மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம், துணைத் தலைவர் எம்.அசோகமித்ரன், இணைச் செயலாளர் கே.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT