நாமக்கல்

எட்டியாம்பட்டி ஏரியில் கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

DIN

பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டி ஏரியில் அடா்ந்து வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

10 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த ஏரியின் மூலம் எட்டியாம்பட்டி,கோடியூா்,எரிகொல்லனூா்,கொட்டாவூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன்மூலம் சுமாா் 500 ஏக்கா் நிலங்களில் விவசாயப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், ஏரியில் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால், நீா்மட்டம் குறைந்து தண்ணீரின்றி ஏரி வறண்டுள்ளன. மேலும், ஏரியிலிருந்து வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீா் வெளியேறுவதில்லை.

கழிவுநீா், குப்பைகள் கொட்டப்பட்டு ஏரியின் சுகாதாரம் சீரடைந்துள்ளது. ஏரி தூா்வாரப்பட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டால் தண்ணீா் சேகரமாகி நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT