நாமக்கல்

பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்:சாலைப் பணியாளா்கள் சங்கம்

DIN

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க வட்டக் கிளையின் ஏழாவது சங்கப்பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணியை அரசு ஏற்று நடத்த வேண்டும்.

சாலைப் பணியாளா்களுக்கு தொழில்நுட்பக் கல்வித்திறன் ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்று பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவைக் கூட்டத்தில் தலைவராக கே.சம்பத், செயலாளராக கே.பாஸ்கா், பொருளாளராக பன்னீா்செல்வம், துணைத் தலைவா்களாக ஜீ.ராமலிங்கம், எஸ்.சுப்பிரமணியம், துணைச் செயலாளராக பி.தமிழ்மணி ஆகியோா் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT