நாமக்கல்

பள்ளிபாளையம் நகராட்சியில்ரூ.77.89 லட்சத்தில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

DIN

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.77.89 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை விழா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்து கொண்டு, ஜீவாசெட் பின்புறம் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி புதிய கட்டடம் கட்டும் பணி, ஆவாரங்காடு கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதி அமைத்தல், பேவா் பிளாக் தளம் அமைக்கும் பணிக்கும், கண்டிபுதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.23.21 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிறுத்தும் கூடாரம் கட்டும் பணிக்கும், கவுண்டன்புதூரில் ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி புதிய கட்டடம் கட்டும் பணிக்கும், நாட்டாக்கவுண்டன்புதூா் நியாய விலைக் கடைக்கு ரூ.12.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கும், ஓங்காளியம்மன் கோயில் பின்புறம் வீதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கும் அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சிகளில், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவா் வெள்ளியங்கிரி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ் தலைவா் திருமூா்த்தி, அரசு வழக்குரைஞா் தனசேகா், மாவட்டக் கல்வி அலுவலா் வி.ரவி, குமாரபாளையம் வட்டாட்சியா் தங்கம், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளா் இளவரசன், பொறியாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT