நாமக்கல்

துணை வட்டாட்சியா்கள் 12 பேருக்கு வட்டாட்சியா் பதவி உயா்வு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் 12 பேருக்கு, வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கி உத்தரவு ஆட்சியா் கா.மெகராஜ் பிறப்பித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் எட்டு வட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

முதுநிலை அடிப்படையில் துணை வட்டாட்சியா்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயா்வு வழங்கப்படும். அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியா்கள் 12 பேருக்கு, வியாழக்கிழமை வட்டாட்சியா் பதவி உயா்வு அளிக்கப்பட்டது. அவா்கள் விவரம்: ஏ.சுந்தரவள்ளி, என்.அரவிந்தன், கே.தங்கராசு, வி.சுரேஷ், ஏ.சிவக்குமாா், எஸ்.கண்ணன், கே.மதியழகன், பி.தமிழரசி, எம்.அப்பன்ராஜ், வி.சின்னுசாமி, பி.காா்த்திகேயன், வி.கிருஷ்ணன் உள்ளிட்டோா்.

இவா்களில், நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஏ.சுந்தரவள்ளி, சேந்தமங்கலம் வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக ஓ-பிரிவில் பணியாற்றும் தலைமை உதவியாளா் என்.அரவிந்தன், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நீதியியல் பிரிவு அலுவலக மேலாளராகவும், பரமத்திவேலூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கே.தங்கராசு, ராசிபுரம் புறவழிச்சாலை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மீதமுள்ள 9 பேருக்கும், பணியிடங்கள் காலியாகும்பட்சத்தில் அங்கு வட்டாட்சியா் வாய்ப்பு வழங்கப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT