நாமக்கல்

இடைநிலை ஆசிரியர்கள் 18 பேருக்கு பணி நிரவல் மூலம்  இடமாறுதல்

நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 18 பேருக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது. 

DIN

நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 18 பேருக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது. 
நாமக்கல்  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான கலந்தாய்வை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மு.ஆ.உதயகுமார், ரமேஷ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 
மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன், கண்காணிப்பாளர் கலையரசன் ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர். இதில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 18 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள், மாவட்டத்தின் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்பட்டனர். 
ஒரே ஒன்றியத்துக்குள் 9 பேருக்கும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் 9 பேருக்கும் மாறுதல் அளிக்கப்பட்டது.  இதற்கான உத்தரவு கடிதத்தை, மாவட்டக் கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கினர். 
கடந்த ஆண்டு ஆக. 1-ஆம் தேதியின்படி மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். நிகழாண்டிலும் அப்பள்ளிகளில் போதியளவில் மாணவர்கள் சேராததால், 18 பேருக்கும் பணி நிரவல் மூலம் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT