நாமக்கல்

விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி

DIN


பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலம் விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய பசுமைப்படை,நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சாரணர் இயக்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பசுமைப்படை ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பத்மா, கபிலர்மலை வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் தேவேந்திர குமார், சாரண ஆசிரியர் சந்திரமோகன் ஆகியோர் உலக வெப்பமயமாதல் மற்றும் மரங்கள் நடுவதின் அவசியம் குறித்து மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிலிக்கல்பாளையம் காவிரி கரையோரம் மற்றும் பிலிக்கல்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விதைப்பந்துகள் தூவப்பட்டன. நாட்டுநலப்பணித்திட்ட உதவி திட்ட அலுவலர் தங்கவேல் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT