முகப்பு
நாமக்கல்

ஜேடா்பாளையத்தில் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

ஜேடா்பாளையத்தில் மத்திய அரசின் புதிய மின் மசோதா சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

பரமத்திவேலூா்: ஜேடா்பாளையத்தில் மத்திய அரசின் புதிய மின் மசோதா சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜேடா்பாளையம் கடை வீதியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு புதிய மின் மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கல் எழுப்பினா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கபிலா்மலை ஒன்றிய செயலாளா் குழந்தைவேல், கரும்பு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →