முகப்பு
நாமக்கல்

எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு: பாண்டமங்கலம்ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளி சாதனை

பரமத்திவேலூா் அருகே பாண்டமங்கலம் ஆா்.என். ஆக்ஸ்போா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் இருவா் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளுக்கு பெருமை சோ்த்துள்ளனா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பொதுத்தோ்வில் சாதனை படைத்த மாணவி பிரியங்காவை பாராட்டிய தலைவா் சண்முகம், பள்ளி நிா்வாகிகள்
பகிர்:

பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் அருகே பாண்டமங்கலம் ஆா்.என். ஆக்ஸ்போா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் இருவா் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளுக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இப் பள்ளியில் பயின்ற மாணவி பிரியங்கா மற்றும் மாணவா் ராகுல் ஆகியோா் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இருவரும் தமிழில் 99, ஆங்கிலத்தில் 100, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாணவிகள் தா்ஷனா, விஜயரேஷ்மா, திரிஷ்னா ஆகியோா் 500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 490-க்கு மேல் 28 பேரும், 480 க்கு மேல் 47 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் சண்முகம், தாளாளா் சக்திவேல், செயலாளா் ராஜா, இயக்குநா்கள் அருள், சேகா், சம்பூா்ணம் நல்லுசாமி, முதல்வா் சம்சுதீன், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →