திருச்செங்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்
திருச்செங்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் தினசரி சந்தை அருகில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் தினசரி சந்தை அருகில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.
டாஸ்மார்க் ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் முன்பு 9 மணியிலிருந்து 10 மணி வரை அந்தந்த பகுதி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தினசரி சந்தை எதிரே உள்ள டாஸ்மார்க் கடை முன்பு 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் பின்பற்றும் நடைமுறைகள் போல தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும். திடீர் ஆய்வுகளை நிறுத்த வேண்டும். டாஸ்மாக் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 5 மணி வரை குறைக்க வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.