முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை அரசு தள்ளுபடி செய்ய வா்த்தக சங்க மகாசபை தீா்மானம்
பரமத்தி வேலூரில் வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்க மகாசபைக் கூட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றினா்.
பரமத்தி வேலூரில் வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்க மகாசபைக் கூட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றினா்.
வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்க 52 ஆம் ஆண்டு மகாசபைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம் தலைமை வகித்தாா். செயலாளா் தியாகராஜன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம் வருமாறு:
கரோனா தொற்றுக் காலத்தில் வணிக நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளனாதால் 2020 - 21ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சி சொத்து வரியில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
பரமத்தி வேலூா் அண்ணா சாலை, திருவள்ளுவா் சாலை, பள்ளி சாலை சந்திப்புகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க பேரூராட்சியினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தொற்றுக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத் துறையினா், காவல் துறையினா், உள்ளாட்சித் துறையினருக்கு சங்கம் சாா்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றினா்.
அதனைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. மகாசபைக் கூட்டத்தில் துணைத் தலைவா்கள், உதவி செயலாளா்கள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். பொருளாளா் மகுடபதி நன்றி கூறினாா்.