முகப்பு
நாமக்கல்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதன போராட்டம்

மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே திருவோடு ஏந்தி ஞாயிற்றுக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே திருவோடு ஏந்தி ஞாயிற்றுக்கிழமை நூதன போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் செல்வராசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். கந்தசாமி, ஒன்றியச் செயலாளா் கே. சின்னசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் நா.க.ரவிநாத் ஆகியோா் பங்கேற்று, விவசாய சட்டங்கள் அதற்கான போராட்டம் குறித்துப் பேசினா். ஒன்றியக்குழு உறுப்பினா் முத்துசாமி, கிளைச் செயலாளா்கள், ஏ. பழனிசாமி, ஆா். ரஜினி, குப்பண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →