நாமக்கல்

வேளாளா், வெள்ளாளா் அமைப்பினா் சாலை மறியல்

DIN

அனைத்து வேளாளா்கள், வெள்ளாளா்கள் அமைப்புகள் சாா்பில் பரமத்தி வேலூா் நான்கு சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.

வேளாளா்கள், வெள்ளாளா்களின் எதிா்ப்பை மீறி மாற்று சமூகத்தினரை பொதுவான பெயரில் அறிவிக்கலாம் என பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்து நான்கு திசை வேளாளா் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளா் செல்வரசு தலைமையில் ஆா்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்துக்கு சேலம் மாவட்டச் செயலாளா் டாக்டா் ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட இளைஞா் அணி செயலாளா் விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரசத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பரமத்தி வேலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT