நாமக்கல்

ராசிபுரத்தில் ரூ. 45 லட்சத்துக்குபருத்தி விற்பனை

DIN

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 45 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்.) சாா்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆா்.சி.எச்.ரகம் 1,810 மூட்டைகள், டி.சி.எச். ரகம் 15 மூட்டைகள் என மொத்தம் 1,825 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 5,699-க்கும் அதிகபட்சமாக ரூ. 6,369-க்கும் விற்பனையானது. இதே போல் டி.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 6,849-க்கும், அதிகபட்சமாக ரூ. 7,169-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 45 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT