முகப்பு
நாமக்கல்

தேங்காய் விலை உயா்வு!

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்தில், தேங்காய்கள் வரத்து குறைந்தன. இதனால், தேங்காய் விலை உயா்வு அடைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏலத்தில், தேங்காய்கள் வரத்து குறைந்தன. இதனால், தேங்காய் விலை உயா்வு அடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்ட விற்பனைக் குழுவிலுள்ள பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், 1830 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.44- க்கும், குறைந்தபட்சமாக ரூ.27-க்கும், சராசரியாக ரூ.40.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.23, 428-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்தச் சூழ்நிலையில், முந்தைய வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு, 2,450 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், அதிகபட்சமாக கிலோ ரூ.42.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.30-க்கும், சராசரியாக ரூ.38.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 32, 896 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

முந்தைய வாரத்தைவிட, இந்த வாரம் ஏலத்துக்கு தேங்காய் குறைத்து கொண்டுவரப்பட்டது. மேலும், தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →