நாமக்கல்

நாமக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல்: விவசாயிகள் போராட்டக் குழுவினா் கைது

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற போராட்டங்களில் 30-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற போராட்டங்களில் 30-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், சட்டங்களைத் திரும்ப பெறக் கோரியும், நாமக்கல்லில் திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், தமிழ் புலிகள் கட்சியினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மறியல், ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை நாமக்கல்-துறையூா் சாலை கொசவம்பட்டி நான்கு ரோடு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து விவசாயிகள் போராட்டக் குழுவினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மறியலில் ஈடுபட முயன்றனா்.

கொசவம்பட்டியில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டப் பொருளாளா் பி.பெருமாள், மாவட்ட உதவித் தலைவா் வி.சதாசிவம், எருமப்பட்டி ஒன்றியத் தலைவா் ராஜேந்திரன், மு.து.செல்வராஜ், பி.கருப்பன், எஸ்.சிவச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில் 8 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT