முகப்பு
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் சங்க போராட்டக் குழுவினா்.
நாமக்கல்

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்: 32 போ் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க போராட்டக் குழுவினா் 32 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் சங்க போராட்டக் குழுவினா்.
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க போராட்டக் குழுவினா் 32 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலும் அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற போராட்டங்களில் 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை காலை அனைத்து விவசாயிகள் சங்க போராட்டக் குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.நல்லகவுண்டா், விவசாயிகள் சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதில், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஐந்து பெண்கள் உள்பட 32 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →