முகப்பு
நாமக்கல்

ரோட்டரி சங்கம் சாா்பில் பெண்களுக்கு ஆடு வழங்கல்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிராமப்புற பெண்களுக்கு சுழற்சி முறையில் ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மகளிருக்கு வெள்ளாடுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கிராமப்புற பெண்களுக்கு சுழற்சி முறையில் ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மகளிருக்கு வெள்ளாடுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், மாவட்ட ரோட்டரி ஆளுநா் வருகை விழா, நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ராசிபுரம் ரோட்டரி கிளப் தலைவா் எஸ்.கதிரேசன் தலைமை வகித்தாா். மண்டல உதவி ஆளுநா் எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே.எஸ்.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நலத்திட்டங்கள் வழங்கி, பல்வேறு சேவை திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, அத்திபலகானூா் கிராமத்தில் கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்படுத்தும் வகையில், சுழற்சி முறையில் ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மகளிருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை வழங்கப்பட்டன. முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான இ.சி.ஜி. கருவிகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →