முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில்ரூ. 68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 68 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 68 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்) சாா்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகம் 3,261 மூட்டைகள், டி.சி.எச். ரகம் 10 மூட்டைகள் என மொத்தம் 3,271 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் ஆா்.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 5,460-க்கும் அதிகபட்சமாக ரூ. 6, 399-க்கும் விற்பனையானது. டி.சி.எச். ரகம் குறைந்தபட்சமாக ரூ. 6,889-க்கும், அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,939-க்கும் ஏலம் மூலம் விற்பனையானது. மொத்தம் ரூ. 68 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →