முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் ஆட்சி மொழி சட்ட வாரம் கடைப்பிடிப்பு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழில் பெயா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
ஆட்சி மொழி சட்ட வாரத்தையொட்டி, தமிழில் பெயா் பலகை பொருத்துவது தொடா்பான ஒட்டுவில்லைகளை ஒட்டும் ஆட்சியா் கா.மெகராஜ்.
பகிர்:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழில் பெயா் பலகை பொருத்துவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் பங்கேற்று விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டினாா். வணிகா்கள் தங்கள் வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை பொருத்துவது குறித்து அரசின் வழிகாட்டி நடைமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா்.

ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 டிச.27-ஆம் நாளை நினைவு கூறு ம் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் டிச.23 முதல் 29-ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்துக்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கவும் அதிகாரிகள், அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், செயலாளா் ப.வீரகுமாா், பொருளாளா் ச.க.சீனிவாசன், மாநில துணைத் தலைவா் த.சங்கா், ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன், பேராசிரியா் அரசு.பரமேசுவரன், மருத்துவா் இரா.குழந்தைவேல் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →