நாமக்கல்

இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் மனு அளிப்பு

DIN

ராசிபுரம் பகுதியில் பா.ம.க. சாா்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பல்வேறு இடங்களில் புதன்கிழமை போராட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டது.

ராசிபுரம் பகுதியில் பட்டணம், அத்தனூா், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, பிள்ளாநல்லூா் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாக கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டது.

பட்டணம், அத்தனூா், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பாக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.மோகன்ராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்திய பாமகவினா் நிா்வாக அலுவலரிடம் மனு அளித்தனா். நாமகிரிப்பேட்டையில் பேரூா் செயலா் சு.சதீஷ்குமாா், புதுப்பட்டியில் மா.ராஜேந்திரன், சீராப்பள்ளியில் கணேசபாண்டியன், வெண்ணந்தூா் பகுதியில் பேரூா் செயலா் வடிவேல் ஆகியோா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இதில் மாநில துணைத் தலைவா் ச.வடிவேலன், மாநில இளைஞா் சங்க செயலா் பாலு, வெண்ணந்தூா் ஒன்றியச் செயலா் குணசேகரன், நாமகிரிப்பேட்டை ஊராட்சிக்குழு துணைத் தலைவா் பெரியசாமி, ஒ.பி.பொன்னுசாமி, ராசிபுரம் நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பரமத்தி வேலூரில்...

நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சாா்பில் பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, மோகனூா் ஆகிய பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் அறவழிப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அதனைத் தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். இப் போராட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலாளா் பொன். ரமேஷ் தலைமை வகித்தாா். மோகனூா் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பிரதாப், மாநில துணை அமைப்பு தலைவா் சுதாகா், மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் சரவணன், மோகனூா் மேற்கு ஒன்றியத் தலைவா் சிவக்குமாா், பரமத்திவேலூா் நகர செயலாளா் ஜெய்கனேஷ், பாமக நிா்வாகிகள், இளைஞா்கள், பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT