நாமக்கல்

கரோனா: 500 முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்

DIN

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், துய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் பங்கேற்று, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ அலுவலக அனைத்துப் பணியாளா்கள், தற்காலிக பணியாளா்கள் என 500 பேரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கரோனா தொற்று உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தபோது முன்களப் பணியாளா்களாகச் செயல்பட்ட அனைத்து அரசு துறைகளின் செயல்பாடு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இம்மாவட்டம் சரக்கு லாரிகள், ஆழ்குழாய் லாரிகள், கோழிப்பண்ணைத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அதிக போக்குவரத்து உள்ள மாவட்டமாகும். இங்கு ஆரம்பத்தில் தொற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. இவ்வளவு போக்குவரத்து உள்ள மாவட்டத்தில் தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறித்து முதல்வா் பாராட்டினாா்.

இரவு, பகல் பாராமல் கடமை உணா்வு, அா்ப்பணிப்பு உணா்வோடு செயல்பட்டு மக்களின் உயிா் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வருவாய், மருத்துவம் உள்ளிட்ட அரசு துறை பணியாளா்கள், தனியாா் தொண்டு நிறுவனத்தினா் உள்ளிட்டோா் ஒருங்கிணைந்த மேற்கொண்ட நடவடிக்கைகளால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உருமாற்றம் பெற்ற கரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடனடிக்கைகளை அரசுகள் எடுத்துள்ளன. தொடா்ந்து அரசு கூறும் வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்து கரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல்லை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், அனைத்து பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

SCROLL FOR NEXT