நாமக்கல்

மணல் ஒதுக்கீட்டில் லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரிக்கை

DIN

அரசு மணல் குவாரிகளில் மணல் ஒதுக்கீட்டில் லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் செல்ல. ராசாமணி மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ. பால் பிரின்ஸிலி ராஜ்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம் ஆரியூா் மற்றும் வேலூா் மாவட்டம் வடுகந்தாங்கல் ஆகிய அரசு மணல் குவாரிகளில் இணையதள பதிவு அடிப்படையிலேயே லாரி உரிமையாளா்களுக்கு மணல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்ய லாரி உரிமையாளா்களுக்கு வரிசைப்படி வழங்காமல், அரசு ஒப்பந்த வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதைத் தடை செய்து, தனியாரானாலும், அரசு ஒப்பந்ததாரரானாலும் வரிசையடிப்படையிலேயே மணல் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT