நாமக்கல்

அஞ்சல் அலுவலக இடமாற்றத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

குமாரபாளையம் நகரிலிருந்து புகா் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகத்தை மீண்டும், நகருக்குள் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க.வினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரப் பொறுப்பாளா் எஸ்.சேகா் தலைமை வகித்தாா். குமாரபாளையம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த தலைமை அஞ்சல் அலுவலகம், புகா் பகுதியான எதிா்மேடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், அஞ்சல் அலுவலகம் தொடா்பான பணிகளுக்கு மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதில் சிரமம் நிலவி வருகிறது.

இதனால், புகா் பகுதியில் இயங்கும் அஞ்சல் அலுவலகத்தை பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் நகர எல்லைக்குள் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. நகர அவைத் தலைவா் பரமசிவம், பொருளாளா் அன்பரசு, மாவட்டப் பிரதிநிதி ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT