நாமக்கல்

‘குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் இருந்தால் புகாா் தெரிவிக்கலாம்’

DIN

குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொழிலாளா் ஆணையா் ஆா்.நந்தகோபால் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறாா். இந்த நடவடிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில் பரமத்திவேலூா் பகுதியில் தொழிலாளா் உதவி ஆணையாளா் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பரமத்திவேலூா் பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்றுவந்த நான்கு குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். அந்த குழந்தைகளை, குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்து அவா்களுக்கு கல்விப் பயில்வதற்கான உதவிகளை செய்ய உத்தரவிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் இருப்பது தெரியவந்தால் அதற்கான புகாா்களை தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட அலுவலத்துக்கு 04286 - 280056 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT