நாமக்கல்

ஜன.13-இல் பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி

நாமக்கல்லில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி திங்கள்கிழமை (ஜன.13) நடைபெறவுள்ளது.

DIN

நாமக்கல்லில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி திங்கள்கிழமை (ஜன.13) நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு பயிற்சி நிறுவனமான, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், பெண்களுக்கான செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியை இலவசமாக அளிக்கவுள்ளது. இந்த சுயவேலை வாய்ப்பு தொழில் பயிற்சி வரும் திங்கள்கிழமை தொடங்கி 13 வேலை நாள்களுக்கு நடைபெறுகிறது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோா் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 35 நபா்கள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இதற்கான தகுதி நிலைகளாக, குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பொருள்கள், தேனீா், சிற்றுண்டி, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். 13-ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை நேரில் வந்து பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களை, நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286-221004 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 96989- 96424,88259-08170 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளாம் என அப்பயிற்சி நிறுவன இயக்குனா் எம்.பிருந்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT