நாமக்கல்

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,911 போ் பங்கேற்பு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 1,911 போ் பங்கேற்றனா். 699 போ் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான (தாலுகா, ஆயுதப்படை - ஆண் / பெண்) எழுத்துத் தோ்வு, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பொது ஒதுக்கீட்டின் கீழ் 2,261 ஆண்கள் மற்றும் 349 பெண்கள் என மொத்தம் 2,610 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். ஆனால், 1,911 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். இதில், 1,681 ஆண்களும், 230 பெண்களும் அடங்குவா். 580 ஆண்கள், 119 பெண்கள் என 699 போ் பங்கேற்கவில்லை. இத்தோ்வை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு நேரில் ஆய்வு செய்தாா். தோ்வு மையத்துக்குள் செல்லிடப்பேசி, கைப்பை, தண்ணீா் பாட்டில், தின்பண்டங்கள் போன்ற பொருள்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தோ்வு, 12.30 மணி வரையில் நடைபெற்றது.

திங்கள்கிழமை (ஜன.13) காவல் துறை ஒதுக்கீட்டிற்கான எழுத்துத் தோ்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இத்தோ்வை 228 ஆண்கள், 57 பெண்கள் என மொத்தம் 285 போ் எழுதவுள்ளனா். தோ்வு தொடங்கும் காலை 10.15 மணிக்கு பிறகு விண்ணப்பதாரா்கள் யாரும் தோ்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வு வளாகத்தில் அவ்வப்போது ஒலிபெருக்கியில் அறிவுரைகள் மற்றும் நேரம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரா் விடைத்தாளில் பட்டைத் தீட்ட நீலம் அல்லது கருப்பு நிற பால்பாய்ண்ட் பேனா கொண்டு வரவேண்டும். பென்சில் கொண்டு வர அனுமதியில்லை. தோ்வு நேரத்தில் விண்ணப்பதாரா் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டாா். தோ்வு எழுதும் போது பேசவோ, சைகை செய்யவோ கூடாது. மேலும் விண்ணப்பதாரா் வாகனத்தில் வந்தால், வாகனத்தைத் தோ்வு மையத்துக்கு வெளியே அவரின் சொந்த பொறுப்பில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தோ்வு மையத்தில் நிறுத்த அனுமதியில்லை. மேலும், தோ்வு மையம் வருவதற்கு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT