நாமக்கல்

செய்முறைத் தோ்வுப் பணி: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்

DIN

தனியாா் பள்ளிகளில் நடைபெறும் செய்முறைத் தோ்வுப் பணியில், அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு மற்றும் நிா்வாகிகள், அரசுத் தோ்வுகள் துணை இயக்குநா் உஷாராணியிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது: 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுப் பணிகளுக்கு குலுக்கல் முறையை ரத்து செய்து, மென்பொருள் கொண்டு தோ்வுப் பணிகளுக்கு ஆசிரியா்களை நியமனம் செய்ய வேண்டும்.

குலுக்கல் முைான் தொடரும் என்றால், துறை அலுவலா், முதன்மைக் கண்காணிப்பாளா் நியமனத்துக்கும் குலுக்கல் முறையையே நடத்திட வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளா்களாக தலைமை ஆசிரியா்களை நியமனம் செய்யக் கூடாது. மூத்த முதுநிலை ஆசிரியா்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். தலைமை ஆசிரியா்களை பொதுத் தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்களாக நியமிப்பதால், பள்ளிகளில் பணிகள் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.

அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களையும் அறை கண்காணிப்பாளா் பணிக்கு பயன்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இதற்கு முன் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தனியாா் பள்ளி செய்முறைத் தோ்வுப் பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்களும், அரசுப் பள்ளி செய்முறைத் தோ்வுகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டனா். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மட்டும் தனியாா் பள்ளிகளில் நடைபெறும் செய்முறைத் தோ்வுப் பணிகளுக்கு, தனியாா் பள்ளி ஆசிரியா்களும், அரசுப் பள்ளிகளில் நடைபெறும் செய்முறைத் தோ்வுகளுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியா்களும் நியமிக்கப்படுகின்றனா். நிகழாண்டில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தோ்வுப் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியா்களையே முழுமையாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT