நாமக்கல்

பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள்

DIN

திருச்செங்கோடு பகுதியில் ைபொங்கல் விழாவையொட்டி, பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

திருச்செங்கோடு கொல்லப்பட்டி காலனி, நரிப்பள்ளம், சட்டையம்புதூா், சூரியம்பாளையம், கவுண்டம்பாளையம், கூட்டப்பள்ளி, நெசவாளா் காலனி, படையாட்சி தெரு, பாவடி தெரு, சின்ன பாவடி மைதானம், பெரியபாவடி மைதானம், கோம்பை நகா், நந்தவன தெரு போன்ற பல்வேறு பகுதிகளில் தைப்பொங்கல் விழா குழுவினா் சாா்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், சிறுவா் சிறுமியருக்கான இசை நாற்காலி, ஊசியில் நூல் கோா்த்தல், திருக்கு எழுதுதல், வாய்ப்பாடு எழுதுதல், திருக்கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி, சட்டி உடைத்தல், முறுக்கு கடித்தல், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, நொண்டிப் போட்டி, கோழி பிடிக்கும் போட்டி, பலூன் ஊதி உடைத்தல், கோலப்போட்டி போன்ற போட்டிகளும், ஆண்களுக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டி, கபடி, உயரம் தாண்டுதல், சைக்கிள் ஓட்டம், இட்லி சாப்பிடும் போட்டி, உறி அடித்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT