முகப்பு
நாமக்கல்

ஆடி வெள்ளி: நாமக்கல்லில் மூடிய கோயில் கதவை வழிபட்ட பக்தர்கள்!

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்கள் முன்பாக அன்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்கள் முன்பாக அன்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

நுழைவாயில் கதவில் பூக்களை தூவியும்,  கற்பூரம் ஏற்றியும் அம்மனை மனமுருக வேண்டினர். கோயிலுக்குள் தினமும் நடைபெறும் பூஜைக்காக மலர்களை வழங்கி மூடப்பட்டிருந்த கோயிலை பெண் பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டுச் சென்றனர். தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதத்தில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். பெண்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இந்த ஆடி மாதம் கருதப்படுகிறது. 

இத்தகைய சிறப்புமிக்க ஆடி மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் செவ்வாய்,  வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் திரண்டு இருப்பர். கோயில் விழாக்காலம் பூண்டிருக்கும். ஆனால், கரோனா பொதுமுடக்கத்தால் பிரதான கோயில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு (ஜூலை 17) பெண்கள் அதிகாலையே குளித்து வீடுகளில் அம்மனை வழிபட்டனர். பலரும் மூடப்பட்டிருந்த கோயில்கள் முன்பாக நின்று வழிபட்டுச் சென்றனர்.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்று விளங்கும் பலபட்டறை மாரியம்மன் கோயிலில் பூட்டப்பட்டிருந்த கதவுகளுக்கு முன்னால் நின்று வணங்கிய பக்தர்கள் வாயில் முன்பாக சூடம் ஏற்றி வழிபட்டனர். வழக்கமாக ஆடி மாதத்தில் காணப்படும் சிறப்புகள் ஏதுமின்றி கோயில் சுற்றுப் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல, ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

வழக்கமாக பால்குடம், அக்னி சட்டி எடுத்து வரும் பகத்ர்கள் வருகையின்றி சிலர் மட்டுமே வந்து வாயிலில் நின்று சாத்தப்பட்ட கதவுகளை நோக்கி கையெடுத்து கும்பிட்டுச் சென்றனர். இதேபோல, திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்திவேலூர், சேந்தமங்கலம் பகுதிகளிலுள்ள  அனைத்து அம்மன் கோயில்களிலும் வாசலில் நின்றபடியே சிறப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →