முகப்பு
நாமக்கல்

மின் கட்டணம் அதிகரிப்பைக் கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம் அதிகரிப்பைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

மின் கட்டணம் அதிகரிப்பைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் அதிகரிப்பை குறைக்க வலியுறுத்தி திமுக சார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் திமுகவினர் வீடுகளின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அக்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் முல்லை நகர் பகுதியில் உள்ள அக் கட்சி அலுவலகம் மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் தலைமையில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசமும், சலுகைகளும் வழங்கும் நிலையில் தமிழக அரசு ஏன் வழங்க மறுக்கிறது என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, முன்னாள் நகர செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →