நாமக்கல்

வரலஷ்மி விரதம்: பரமத்திவேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

DIN

பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் வரலஷ்மி விரதத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.250, சம்பங்கி கிலோ ரூ.80, அரளி கிலோ ரூ.100, ரோஜா கிலோ ரூ.150, முல்லைப்பூ கிலோ ரூ.280க்கும் ஏலம் போனது. வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700, சம்பங்கி கிலோ ரூ.100, அரளி கிலோ ரூ.150, ரோஜா கிலோ ரூ.220, முல்லைப்பூ கிலோ ரூ.700க்கு ஏலம் போனது. வரலஷ்மி விரதத்தை முன்னிட்டு பூக்களை ஏலம் எடுக்க அதிக அளவில் பொதுமக்களும் வந்ததால் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT