நாமக்கல்

கண் கலங்கிய பிகார் இளைஞர்: கை கொடுத்த மாவட்ட ஆட்சியர்

DIN

தாய் உயிரிழந்த நிலையில் ெசாந்த ஊர் ெசல்ல முடியாமல் தவித்து வந்த பிகார் இளைஞர், மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமையன்று முறையிட உடனடியாக சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் ேசர்ந்த ஆயிரத்துக்கும் ேமற்பட்ட ெதாழிலாளர்கள் அண்மையில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் முலம் தங்களுடைய ெசாந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடும் ெவளிமாநில ெதாழிலாளர்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல்-சேலம் சாலை பதிநகரில் உள்ள ஏ.ஆர்.சி. பயோடெக் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த அகிலேஷ்ராம்(33) என்ற பிகார் மாநில இளைஞர் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தன்னுடைய தாய் உயிரிழந்த தகவல்களை ஆதாரத்துடன் ெதரிவித்த அவர், பிகாருக்கு அனுப்பி வைப்பதற்கு உதவ வேண்டும் என கண்ணீருடன் தனது கோரிக்கையை முன் வைத்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் உத்தரவின்படி, அவரை ெசாந்த மாநிலத்திற்கு அனுப்ப தேவையான நடவடிக்கை ேமற்ெகாள்ளப்பட்டது.

சேலம், நாமக்கல்லில் இருந்து பிகாருக்கு ரயில் ெசல்லாத நிலையில், திருப்புரில் இருந்து பிற்பகல் 4 மணிக்கு ஒரு ரயில் பிகார் ெசல்லும் விவரம் ெதரியவந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செ.பால்பிரின்ஸிலிராஜ்குமார், ேசலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஹரி என்பவரை ெதாடர்பு ெகாண்டு பிகார் இளைஞர் ஒருவரை மட்டும் சிறப்பு ரயிலில் அனுப்ப நடவடிக்கை ேமற்ெகாள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில், அகிலேஷ்ராமின் நிலையை கருத்தில் ெகாண்டு ரயில்வே அதிகாரி ஒரு இருக்கையை உறுதி ெசய்து ெகாடுத்தார். இதனைத் ெதாடர்ந்து, பிகாருக்கு செல்வதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட நிர்வாகம் தயார் ெசய்து அந்த இளைஞருக்கு ெகாடுத்தது. பின்னர் சிறப்பு வாகனம் முலம் அவர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இக்கட்டான நேரத்தில் சொந்த ஊர் ெசல்ல நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் எடுத்த உடனடி முயற்சியை கண்டு அந்த இளைஞர் கண்கலங்கியதுடன், அனைவருக்கும் நன்றி ெதரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT