நாமக்கல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 52 போ் தோ்வு

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 52 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

DIN

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 52 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தனியாா் துறை நிறுவனங்களும் -தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதியில் செயல்படும் அரசு மற்றும் தனியாா் கல்லுாரிகளில் நடைபெறுகிறது. அதேபோல், வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ராதிகா தலைமையில் நடைபெற்றது. இதில், சோலாா் சிஸ்டம், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், எலெட்ரானிக், எலக்ட்ரிக்கல் உள்பட 13 நிறுவனங்கள் பங்கேற்றன. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் 84 பட்டதாரிகள் பங்கேற்றனா். அவா்களில் 52 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா்கள் சண்முகம், மல்லிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT