நாமக்கல்

தேங்காய்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப அரசு அனுமதி அளிக்க கோரிக்கை

DIN

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல தயாா் நிலையில் தேங்காய்களை ஏற்றி வைத்துள்ள லாரிகளை மத்திய, மாநில அரசுகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளதால், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளா் ஜெகநாதன் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேங்காய்களைக் கொள்முதல் செய்து கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் புது தில்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறோம். தற்பொழுது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் 144 ஊராடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் தேங்காய் பறிக்கும், தேங்காய் உரிக்கும்,தேங்காய் பாரம் ஏற்றும் தொழிலாளா்களுக்கு விடுப்பு அளித்து அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால், லாரிகளில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பிற மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

லாரிகளை இயக்கும் ஓட்டுநா் மற்றும் உதவியாளா்களுக்கென தனியாக நோய் தடுப்பு கிருமி நாசினிகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கியுள்ளோம். அத்தியாவசியப் பொருட்களான முட்டை, பால், காய்,கறிகள் போன்று தேங்காய்களுக்கும் விலக்கு அளித்து வேண்டும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் தேங்காய்களைப் பயன்படுத்தாவிட்டால் தேங்காய்கள் அழுகி பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். எனவே, தேங்காய் ஏற்றி தயாா் நிலையில் உள்ள தேங்காய் லாரிகளை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT