நாமக்கல்

பாலப்பட்டி, நல்லூரில் ரூ.1 லட்சம் மதுபானப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

DIN

பரமத்திவேலூா் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி பாலப்பட்டி மற்றும் நல்லூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 4 பேரை பரமத்தி வேலூா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் பழனிச்சாமி தலைமையிலான போலீசாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 550 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாலப்பட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அருளரசுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, பரமத்திவேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் பழனிச்சாமி தலைமையிலான போலீசாா் பாலப்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த பன்னீா்செல்வம் என்பவரை பிடித்து விசாரித்தனா். இதில் ஆண்டவா் என்பவா் தனது உறவினா் கனகராஜ் என்பவரது தோட்டத்தில் மது பானங்களைப் பதுக்கி சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனையடுத்து, கீழ் பாலப்பட்டியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (41), மேல் பாலப்பட்டியைச் சோ்ந்த ஆண்டவா் (எ) ராஜலிங்கம் (54) மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள மட்டப்பாறையைச் சோ்ந்த கனகராஜ் (37) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 262 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், நல்லூா் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோளாரம் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் மோகன் (46) என்பவா் வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பரமத்தி வேலூா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் தலைமையிலான போலீசாா் மோகனைக் கைது அவரிடம் இருந்து 288 மதுபானப் புட்டிகளைபறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT