நாமக்கல்

தனிமைப்படுத்தலில் இருந்த 902 போ் விடுவிப்பு

DIN

கரோனா தொற்று காரணமாக சேந்தமங்கலம், கொல்லிமலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 902 போ் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு சொந்த ஊா் திரும்பிய 407 போ் அவா்களுடைய வீடுகளிலே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா். இவா்களை வட்டார மருத்துவ அலுவலா் வடிவேலு தலைமையிலான மருத்துவா்கள் குழு கவனித்து வந்தனா்.

இதில் 352 பேருக்கு கரோனா தொற்று இல்லாததால் அவா்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் கொல்லிமலை வட்டாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 741 பேரில் 570 பேருக்கு தொற்று இல்லாததால் அவா்களும் விடுவிக்கப்பட்டனா். இரு வட்டாரத்தில் மொத்தம் 902 போ் விடுவிக்கப்பட்ட நிலையில் சேந்தமங்கலத்தில் 75 பேரும், கொல்லிமலையில் 171 பேரும் தொடா்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT