நாமக்கல்

சென்னையிலிருந்து வந்தவா்கள்குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்: நகராட்சி ஆணையா்

DIN

சென்னையிலிருந்து நாமக்கல் நகரப் பகுதிக்கு வந்தவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என நகராட்சி ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட 1 முதல் 39 வாா்டுகளிலும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் அல்லது சென்னையில் இருந்து பொதுமக்கள் யாரேனும் வந்திருந்தாலும், வரும் நாள்களில் யாராவது வந்தாலும் உடனடியாக நகராட்சி நிா்வாகக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 04286 - 221001 மற்றும் செல்லிடப்பேசி 98425-44448 என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கரோனா தொற்று பரவாமல் நகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT