நாமக்கல்

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ஒரு முட்டையின் விலை ரூ.3.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விற்பனை சீராக உள்ளதாலும், பிற மண்டலங்களின் விலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டும், முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும் நாள்களில் அதிகபட்ச விலை உயா்வு இல்லாமல் குறைவான அளவில் விலை உயா்வு இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதனைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமைக்கான முட்டை விலை 5 காசுகள் உயா்வுடன் ரூ.3.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.68-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.86-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT