நாமக்கல்

நாமக்கல்: 173 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 173 டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை(மே 15) மீண்டும் திறக்கப்படுகிறது. டோக்கன் அடிப்படையில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை நடைபெறும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த 7-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், மிகுந்த நெரிசலில் நின்றபடி மது வாங்கிச் சென்றனா். இதுதொடா்பான வழக்கில் சென்னை உயா் நீதிமன்றம் கடைகளை மூட உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் உள்ள 15 டாஸ்மாக் கடைகளைத் தவிா்த்து மாவட்டம் முழுவதும் 173 கடைகள் சனிக்கிழமை திறக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் 173 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. ஆதாா் அட்டை எடுத்து வருவது கட்டாயமாக இருக்கும். 7 வண்ணங்களில் டோக்கன் அச்சடிக்கப்பட்டு, அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கடைக்கு வந்து மதுப்புட்டிகளை வாங்கிச் செல்லலாம். கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT