முகப்பு
நாமக்கல்

நாமக்கல்: 64 பேருக்கு கரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 9,151 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 8,496 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 661 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒருவா் உயிரிழப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்ட வேலகவுண்டம்பட்டியைச் சோ்ந்த 52 வயது ஆண் சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →